தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் :நிப்டி 24,100க்கு மேலே இருக்கும் வரை ஏற்றத்துக்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் :நிப்டி 24,100க்கு மேலே இருக்கும் வரை ஏற்றத்துக்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் :நிப்டி 24,100க்கு மேலே இருக்கும் வரை ஏற்றத்துக்கு வாய்ப்பு


UPDATED : ஜூலை 18, 2026 03:35 AM

ADDED : ஜூலை 18, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2026 03:35 AM ADDED : ஜூலை 18, 2026 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 54 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி, வர்த்தகத்தின் இடையே 290 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் நாளின் இறுதியில் 261 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 7 குறியீடுகள் உயர்வுடனும், 11 குறியீடுகள் குறைவுடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி 100' குறியீடு அதிக பட்சமாக 0.87 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிக பட்சமாக 1.07 சதவீத இறக்கத்துடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 11 குறியீடுகள் அதிகரித்தும்; 9 குறியீடுகள் சரிந்தும்; 1 குறியீடு மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தன.

இவற்றில், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 2.12 சதவீத உயர்வுடனும், 'நிப்டி பார்மா' குறியீடு அதிக பட்சமாக 1.40 சதவீதம் வீழ்ச்சியுடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மீடியா' குறியீடு மாற்றம் ஏதுமில்லாமல் நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,419 நிறுவனங்களின் பங்குகளில் 1,312 ஏற்றத்துடனும்; 2,004 இறக்கத்துடனும்; 103 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன. கடந்த சில நாட்களாக குறுகிய வரம்பிற்குள் நகர்ந்த நிப்டி, ஒரு வழியாக குறுகிய கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளது.

மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்திற்கான சாதகமான சூழலை காட்டுகின்றன. ஆர்.எஸ்.ஐ., (58.48), ஆர்.ஓ.சி., (1.37) மற்றும் புல்லிஷ் நிலையை காட்டும் ஸ்டோக்காஸ்டிக் ஆசிலேட்டர் என ஒரு சில அளவீடுகள் ஏற்றம் தொடரக்கூடும் என்பதையே உணர்த்துகின்றன.

Image 1599998


எம்.ஏ.சி.டி., புல்லிஷ் கிராஸ் ஓவரை நோக்கி நகர்வதும், ஏற்றத்திற்கான மொமென்டம் வலுப்பெற்று வருவதை சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 24,100க்கு மேலே இருக்கும் வரை ஏற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது.

நிப்டி 24,365க்கு மேலே சென்றால் 24,450-24,500 வரை நகரும் வாய்ப்பு உள்ளது. 24,100க்கு கீழே சென்றால் 24,060-23,975 என்ற லெவலை அடையலாம். செய்திகளுக்கு ஏற்றாற்போல் நிலைமை மாறக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us