டெக்னிக்கல் அனாலிசிஸ்: லாபம் எடுக்கும் எண்ணத்துடன் விற்பனைகள் வரலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: லாபம் எடுக்கும் எண்ணத்துடன் விற்பனைகள் வரலாம்
UPDATED : செப் 17, 2025 03:40 AM
ADDED : செப் 17, 2025 03:38 AM

நிப்டி
நாளின் ஆரம்பத்தில் சிறியதொரு ஏற்றத்துடன் 25,073- புள்ளிகளில் துவங்கிய நிப்டி, தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து, 25,261 என்ற உச்ச அளவினை தொட்டு, நாளின் இறுதியில் 169 புள்ளிகள் ஏற்றத்துடன் 25,239 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):59.10 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்., ):3.33 என இருப்பது ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்பதைப் போன்ற தோற்றத்தையே காட்டுகிறது.
![]() |
எனினும், தொடர்ந்து ஏற்றம் கண்டுவருவதால், அவ்வப்போது லாபத்தை வெளியே எடுக்கும் ரீதியிலான விற்பனை, எந்த நேரத்திலும் வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், 25,190 என்ற நிலை மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நிலைக்கு கீழே சென்றால், நாளின் இறுதியிலும் இறக்கத்தில் நிறைவடைவதற்கான வாய்ப்புள்ளது. தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 25,120, 25,000 மற்றும் 24,925 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,310, 25,380 மற்றும் 25,455 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.
![]() |
வர்த்தக துவக்கத்தில் சிறியதொரு இறக்கத்துடன் 54,778 புள்ளிகளில் ஆரம்பித்த நிப்டி பேங்க், அதன் பின் ஏற்றத்தை சந்தித்து, 55,185 புள்ளிகள் என்ற அதிக பட்ச அளவினை அடைந்து, நாளின் இறுதியில் 259 புள்ளிகள் ஏற்றத்துடன் 55,147- புள்ளிகளில் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):154.82, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 55.01. மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 2.78 என்ற அளவிலும் இருக்கிறது.
இந்த நிலைமையில் ஏற்றம் உருவாக 55,035 புள்ளிகள் என்ற அளவுக்கு கீழே போகாமல் வர்த்தகம் நடக்கவேண்டும். 54,790, 54,695, மற்றும் 54,615 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும் 55,295, 55,445 மற்றும் 55,595 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.