டெக்னிக்கல் அனாலிசிஸ் : சிறியதொரு மீட்சி வந்து போக வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : சிறியதொரு மீட்சி வந்து போக வாய்ப்புள்ளது
UPDATED : அக் 15, 2026 02:30 AM
ADDED : அக் 14, 2026 10:32 PM

14.10.2026 ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 22,715.75 22,757.95 22,558.95 22,622.70
ஆறு புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி பெரிய மாறுதல்கள் ஏதுமில்லாமல் வர்த்தகமாகி, பின்னர் 1 மணியளவில் வந்த திடீர் இறக்கத்தில் 163 புள்ளிகள் வரை சரிந்து, பிறகு சற்று மீண்டு நாளின் இறுதியில் 99 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளில் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும் 14 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.71 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.55 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறைசார் குறியீடுகளில் 7 குறியீடுகள் ஏற்றத்துடனும் 14 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி எப்.எம்.சி.ஜி.,' குறியீடு அதிகபட்சமாக 1.21 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பைனான்ஷியல் சர்விசஸ் எக்ஸ்-பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.64 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,667 நிறுவனங்களின் பங்குகளில் 2,023 ஏற்றத்துடனும், 1,536 இறக்கத்துடனும், 108 மாற்றம் ஏதுமில்லாமலும் நிறைவடைந்தன. நிப்டி அனைத்து முக்கிய சராசரிகளுக்கும் (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., 41.66 மற்றும் எம்.ஏ.சி.டி., -297.59 என்ற அளவில் இருப்பது நிப்டி பலவீனமாக இருப்பதையே காட்டுகின்றது.
குறுகிய கால மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் சற்று முன்னேற்றம் கண்டிருப்பது ஒரு தற்காலிக மீட்சிக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. 22,715-22,758 மற்றும் 22,874 என்ற லெவல்தனில் இருக்கும் ரெசிஸ்டென்ஸ் ஏற்றம் நடக்கவிடாமல் மட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. 22,523க்கு கீழே சென்றால் 22,478 என்ற அளவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. இதையும் தாண்டி இறங்கினால் 22,218-22,180 என்ற லெவல் வரை செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றது.

மொத்தத்தில் சிறியதொரு மீட்சி வந்து போக வாய்ப்புள்ளது. 22,874க்கு மேல் சென்றால் ஏற்றத்திற்கான அறிகுறிகள் தென்படலாம். 22,523க்கு கீழே இறங்கினால் பலவீனம் மேலும் அதிகரிக்கலாம்.
