உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 07, 2026 01:28 AM

அ நிறம் | அளவு
டாடா குழுமத்தின் சில்லரை வர்த்தக நிறுவனமான 'டிரென்ட்' பங்கு நேற்று 11
சதவீதம் வரை உயர்ந்தது. இரண்டாவது காலாண்டில் வருவாய் 23 சதவீதம்
உயர்ந்ததையடுத்து, நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி எதிர்பார்ப்புகளைவிட
சிறப்பாக இருந்ததாக முன்னணி தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டிரென்ட் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி தங்களது மதிப்பீட்டை விட அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ள 'கோல்டுமேன் சாக்ஸ்' ஆய்வு நிறுவனம், இலக்கு விலையை 2,960 ரூபாயிலிருந்து 3,010 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
