அமெரிக்க சுங்கவரி நீக்கம் இந்திய ரூபாய்க்கு சாதகம்
அமெரிக்க சுங்கவரி நீக்கம் இந்திய ரூபாய்க்கு சாதகம்
ADDED : நவ 18, 2025 12:54 AM

தி ங்கட்கிழமையன்று, ரூபாய் மதிப்பு சிறியளவில் வலுவடைந்து, 88.80 என்ற ப லவீனமான நிலையைத் தாண்டி மேலே நகர்ந்தது.
அமெரிக்காவில் உணவுப் பொருட்கள் விலை உயர்வைச் சமாளிக்க, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், 200-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு சுங்க வரியை நீக்கியதே இதற்கு காரணம்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விவசாய பொருட்கள் ஏற்றுமதி சமீபத்தில் குறைந்து வந்தது. சுங்க வரி தளர்வால் இந்திய விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு மீண்டும் தேவை அதிகரி க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூபாய்க்கும் ஆதரவாக இருக்கும்.
இந்தியாவுக்கு மிக வலுவான ஆதரவு அமைப்புகள் உள்ளன. நாட்டின் அன்னிய செலாவணி சேமிப்பு 687 பில்லியன் டாலராக உள்ளது. இது, 11 மாத இறக்குமதிக்கு போது மானது. பிற நாணயங் களோடு ஒப்பிடும்போது, தற்போது ரூபாய் மதிப்பு குறைவாகவே உள்ளது. இவை, ரூபாயை நிலை நிறுத்தும் வலிமையான காரணிகளாக செயல் படுகின்றன.
கணிப்பு:
தற்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 88.40-88.80 என்ற வரம்பில் நிலையாக உள்ளது. 88.40-க்கு கீழே சென்றால், ரூபாய் மேலும் வலுப்பெற்று, 88.00-87.70 என்ற அளவிற்கு உயரும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் பட்சத்தில், 88.80-89.00 என்பது தடுப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

