/
செய்திகள்
/
வர்த்தகம்
/
சேமிப்பு திட்டம்
/
இந்திய இல்லங்களின் சேமிப்பு நிலை விகிதம்
/
இந்திய இல்லங்களின் சேமிப்பு நிலை விகிதம்
ADDED : மார் 10, 2025 01:17 PM
இந்திய இல்லங்களின் சேமிப்பு விகிதம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை விட அதிகம் இருப்பதும், சீனா, இந்தோனேஷியா உள்ளிட்ட கிழக்கிந்திய நாடுகளை விட குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தியுடன் ஒப்பிடப்படும் மொத்த சேமிப்பு விகிதம் சர்வதேச சராசரியை விட இந்தியாவில் அதிகம் இருப்பதாக, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்கம் மற்றும் கிரிசில் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டில் சர்வதேச சேமிப்பு விகிதம் 27 சதவீதமாக இருந்த நிலையில், இந்திய சேமிப்பு விகிதம் 29.3 சதவீதமாக இருந்தது.
சீனாவின் இல்ல சேமிப்பு விகிதம் 44 சதவீதமாகவும், சிங்கப்பூரில் 58 சதவீதமாகவும், இந்தோனேஷியாவில் 38 சதவீதமாகவும் உள்ளது. அமெரிக்காவில் இது 18 சதவீதமாக உள்ளது.
இந்திய இல்லங்களின் சேமிப்பில், மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் பங்கு தொடர்ந்து சீராக உள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2021ல் 7.5 சதவீதமாக இருந்த மியூச்சுவல் பண்ட் முதலீடு பங்கு, 2022ல் 8.5 சதவீதமாகவும், 2023ல் 8.4 சதவீதமாகவும் உள்ளது.