/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சீன மின்சார வாகனங்களுக்கு 100% வரி: அமெரிக்கா திட்டம்
/
சீன மின்சார வாகனங்களுக்கு 100% வரி: அமெரிக்கா திட்டம்
சீன மின்சார வாகனங்களுக்கு 100% வரி: அமெரிக்கா திட்டம்
சீன மின்சார வாகனங்களுக்கு 100% வரி: அமெரிக்கா திட்டம்
ADDED : மே 11, 2024 08:26 PM

புதுடில்லி:சீனாவில் இருந்து மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் அதிகப்படியான மின்சார வாகன தயாரிப்பு திறன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கீழ் உள்ள நிர்வாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சீன மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 25 சதவீதமாக உள்ள இறக்குமதி வரியை, 100 சதவீதமாக உயர்த்தினால், அது அமெரிக்கா மற்றும் சீனா இடையே உள்ள வர்த்தக போட்டியை மேலும் அதிகரிக்கும். அமெரிக்கா வரியை உயர்த்தும்பட்சத்தில், சீனாவும் பழிவாங்கும் நடவடிக்கையாக வரிகளை உயர்த்தக்கூடும்.
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் விலை, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களை விட, மூன்று முதல் நான்கு மடங்கு குறைவாக உள்ளது; அதேசமயம் அதே தரத்தில் உள்ளது.
அமெரிக்காவில் சீன வாகனங்களை அனுமதிப்பதால், அமெரிக்காவின் வாகன தொழில்துறை பெரிதும் பாதிக்க வாய்ப்புள்ளதாக பலர் கருதுகின்றனர்.
எனவே, இறக்குமதி வரியை அதிகரிப்பதை காட்டிலும், சீன மின்சார வாகனங்களை முற்றிலுமாக தடை செய்யமாறு கோரிக்கை எழுந்துள்ளது.