/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சமையல் பாத்திரங்களுக்கும் தரச்சான்றிதழ் கட்டாயம்
/
சமையல் பாத்திரங்களுக்கும் தரச்சான்றிதழ் கட்டாயம்
ADDED : ஜூலை 05, 2024 11:33 PM

புதுடில்லி:ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினிய சமையல் பாத்திரங்களுக்கு, தரச்சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடந்த மார்ச் 14ம் தேதி, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை யான டி.பி.ஐ.ஐ.டி., தரக்கட்டுப்பாட்டு ஆணை ஒன்றை வெளியிட்டது.
அந்த ஆணையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினிய சமையல் பாத்திரங்களுக்கு பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய கழகத்தால் வழங்கப்படும் ஐ.எஸ்.ஐ., முத்திரை கட்டாயம் என தெரிவித்துஇருந்தது.
பி.ஐ.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து தெரிவித்துஉள்ளதாவது:
ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாமல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினிய பாத்திரங்களை இறக்குமதி, விற்பனை, வினியோகம் செய்வதோ, சேமிப்பதோ கூடாது.
அரசின் இந்த உத்தரவுக்கு இணங்காதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.