/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
புனேயை வளைத்து போடும் 'மைக்ரோசாப்ட்'
/
புனேயை வளைத்து போடும் 'மைக்ரோசாப்ட்'
ADDED : செப் 15, 2024 12:09 AM

புனே,:தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'மைக்ரோசாப்ட்' புனேவில், 453 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைக்ரோசாப்ட் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தரவு மையங்கள் மற்றும் மேம்பாட்டு மையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் நோக்கில், முக்கிய வணிக நிலப்பரப்புகளில் தன் முதலீட்டை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக தற்போது, புனேவில் உள்ள ஹிஞ்சேவாடியில் 453 கோடி ரூபாய் மதிப்பிலான, 16.40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் சில வாரங்களுக்கு முன், கிட்டத்தட்ட 520 கோடி ரூபாய்க்கு, இதே பகுதியில் 13.60 ஏக்கர் நிலத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் 973 கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஏக்கர் நிலத்தை இப்பகுதியில் கையகப்படுத்தியுள்ளது. மேலும், ஹைதராபாதிலும் 48 ஏக்கர் நிலத்தை 267 கோடி ரூபாய்க்கு நடப்பாண்டு துவக்கத்தில் வாங்கியது.
ஏற்கனவே, புனேவில் உள்ள 10.89 லட்சம் சதுர அடி வணிக நிலத்தை, 328.84 கோடி ரூபாய்க்கு, 'பினோலக்ஸ்' நிறுவனத்திடமிருந்து கடந்த 2022ல் வாங்கியிருந்ததும் நினைவு கூரத்தக்கது.