/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆர்.வி.என்.எல்., பங்கு: ஒரே வாரத்தில் 54% உயர்வு
/
ஆர்.வி.என்.எல்., பங்கு: ஒரே வாரத்தில் 54% உயர்வு
ADDED : ஜூலை 12, 2024 12:35 AM

புதுடில்லி: பொதுத்துறை ரயில் நிறுவனமான ஆர்.வி.என்.எல்., பங்கு விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.
'ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்' கடந்த சில வாரங்களாக பல்வேறு ஆர்டர்களை பெற்று வருவதால், இதன் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் 5ம் தேதி, இந்நிறுவன பங்கின் விலை 312 ரூபாயாக இருந்தது, தற்போது இரண்டு மடங்குக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 54 சதவீதம் உயர்ந்து உள்ளது.
மத்திய ரயில்வேயிடம்இருந்து 138 கோடி ரூபாய் திட்டத்துக்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றதாக இந்நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, தேசிய பங்கு சந்தையில், நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, பங்கு விலை 644 ரூபாய் எனும் புதிய உச்சத்தை எட்டியது. எனினும் வர்த்தக முடிவில், 628 ரூபாயாக குறைந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் இடையே இதன் சந்தை மதிப்பு, ஒரு கட்டத்தில் பி.பி.சி.எல்., மற்றும் பி.என்.பி., வங்கியின் சந்தை மதிப்பை கடந்தது. எனினும், வர்த்தக நேர இறுதியில் அவற்றை விட சற்றே குறைந்து, 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை சேவைகளைப் பெறுவதற்காக, 'ஐ.எம்.எஸ்., கன்சல்டன்சி' எனும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக, ஆர்.வி.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது.

