/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'சிட்கோ' தொழில் மனைகள் மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை
/
'சிட்கோ' தொழில் மனைகள் மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை
'சிட்கோ' தொழில் மனைகள் மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை
'சிட்கோ' தொழில் மனைகள் மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை
ADDED : ஜூலை 05, 2024 11:53 PM

சென்னை:தமிழக அரசின் சிட்கோ நிறுவனத்தின் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்வதில், பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கு முன்னு ரிமை அளிக்கப்படுகிறது.
தமிழகம் முழுதும், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், 8,600 ஏக்கரில் 130 தொழிற்பேட்டைகளை நிர்வகிக்கிறது. அவற்றில் உள்ள மனைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தற்போது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், திருவாரூர், துாத்துக்குடி, கடலுார் ஆகிய மாவட்டங்களில், 115 கோடி ரூபாயில், 248 ஏக்கரில் எட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவை தவிர, அடுக்கு மாடி தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் தொழில் துவங்க, திட்ட மதிப்பில் 35 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக பலரும் தொழில்களை துவக்கி வருகின்றனர். மத்திய அரசின், 'உத்யம்' சான்று பதிவு இருந்தால், இதில் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இதை பயனாளிகள் பயன்படுத்தி தொழில் துவங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.