/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
திருமண செலவுகளுக்கும் முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.
/
திருமண செலவுகளுக்கும் முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.
திருமண செலவுகளுக்கும் முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.
திருமண செலவுகளுக்கும் முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.
ADDED : ஆக 04, 2024 11:56 PM
பெற்றோர்களை பொருத்தவரை பிள்ளைகளுக்கான உயர் கல்வி போலவே, அவர்களின் திருமணமும் முக்கிய பொறுப்பு. உயர்கல்வி தேவைக்காக முன்கூட்டியே திட்டமிட்டு சேமிப்பது போலவே, திருமண செலவுகளுக்காகவும் திட்டமிட்டு சேமித்து வருவது அவசியம். மாறிவரும் வாழ்வியல் காரணமாக, திருமண ஆடம்பரங்கள் செலவை அதிகரிக்கலாம். அண்மை காலத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் திருமண செலவுகளை சமாளிக்க தனிநபர்க் கடன் வாங்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. இது எதிர்கால சுமையை உண்டாக்கும். எனவே திட்டமிடல் அவசியம். அதற்கான வழிகளை பார்க்கலாம்.
-
எப்போது துவங்குவது? உயர்கல்வி சேமிப்பு போலவே திருமண செலவுகளுக்கான திட்டமிடலையும் ஆரம்பத்திலேயே மேற்கொள்ள வேண்டும். எந்த வகையான திருமணம் தேவை என்பதை தீர்மானித்து அதற்கான உத்தேச செலவை கணக்கிடுவது நல்லது. அதற்கேற்ப சேமிக்கத்துவங்க வேண்டும்.
-
பணவீக்கம்: திருமண செலவுகளோடு, திருமணத்திற்கு தேவையான தங்க நகைகளை வாங்குவதையும் மனதில் கொள்ள வேண்டும். தங்க நகைகளை வாங்குவதற்கு என தனியே திட்டம் வகுக்கலாம். ஆனால், திருமண செலவு, தங்கம் தேவை ஆகியவை மீதான பணவீக்கத்தின் தாக்கத்தையும் கணக்கிட வேண்டும்.
-
தங்க முதலீடு: தங்க நகை வாங்குவதற்கு பலவித வழிகள் இருக்கின்றன. பாரம்பரிய முறையில் தங்க நகை சீட்டு முறையை பலரும் நாடுகின்றனர். எனினும், நகை வடிவில் வாங்குவதை விட தங்க சேமிப்பு பத்திரம் அல்லது தங்க நிதிகளில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். டிஜிட்டல் வடிவிலும் முதலீடு செய்யலாம்.
-
வைப்பு நிதி; தங்கம் அல்லாத பிற செலவுகளுக்கு சமபங்கு முதலீடு மற்றும் வைப்பு நிதி போன்ற நிரந்தர வருமானம் முதலீடுகளை நாடலாம். திருமண காலம் நெருங்கும் போது, சமபங்கு முதலீட்டை குறைத்து வைப்பு நிதி முதலீட்டை அதிகரிக்கலாம். எஸ்.ஐ.பி., முறையில் சமபங்கு நிதிகளில் முதலீடு செய்வது வருவதும் ஏற்றது.
-
கடன் சுமை: திருமணம் என்பது இரு குடும்பங்களின் விழா மட்டும் அல்ல, சமூகம் சார்ந்ததும் தான். ஆனால், சமூக காரணங்களுக்காக திருமணத்தில் மிகை செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குதையும் தவிர்ப்பது நல்லது. நிதி சூழலுக்கு ஏற்ப திருமண பட்ஜெட்டை அமைத்துக்கொள்வது நல்லது.