sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

யாரெல்லாம் 'நில் ரிட்டர்ன்' தாக்கல் செய்ய வேண்டும்?

/

யாரெல்லாம் 'நில் ரிட்டர்ன்' தாக்கல் செய்ய வேண்டும்?

யாரெல்லாம் 'நில் ரிட்டர்ன்' தாக்கல் செய்ய வேண்டும்?

யாரெல்லாம் 'நில் ரிட்டர்ன்' தாக்கல் செய்ய வேண்டும்?


ADDED : ஜூலை 01, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆலோசகர் வாரன் பபெட், தனது முதலீடுகளில் இருந்து பெரும்பகுதியை எடுத்து, ரொக்கமாக வைத்திருக்கிறார். பங்குச் சந்தை சரிவை எதிர்பார்த்தே அவர் இந்த முடிவு எடுத்திருப்பதாக சொல்கின்றனர். அவரது வழியை பின்பற்றுவது சரியா?


ஜெ. கல்யாணராமன், சேலம்.

பெரும்பகுதியை வாரன் பபெட் எடுக்கவில்லை. சிறுபகுதியைத் தான் எடுத்திருக்கிறார். புதிய வாய்ப்புகள் வரும்போது முதலீடு செய்வதற்காக, இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தகவல்.

பங்குச் சந்தை எல்லா நேரமும் உயர்ந்துகொண்டே போகாது; சரிவும் ஏற்படும். ஆனால், பெரும்பாலான ஆண்டுகளில் 10 சதவீத அளவு வரை சரிவு இருந்திருக்கிறது. அதற்கு பயந்துகொண்டு, முதலீட்டை எடுத்துவிடாதீர்கள். நீண்டகால சரிவுநிலை என்பதை நாம் சமீபத்திய வரலாற்றில் பார்க்கவில்லை. இந்த நிலையில், சரிவு ஏற்படுமானால், அதை புதிய பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாக பாருங்கள்.

ஆதார் அட்டையில் என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டும். அஞ்சலகத்தில் போய் மாற்றிக்கொள்ள சொல்கின்றனர். அப்படித் தான் செய்ய வேண்டுமா?


எஸ். பால்ராஜ், திருவள்ளூர்.

அஞ்சலகத்திலும், ஆதார் மையத்திலும், ஏன் வீட்டில் கணினி இருந்தால், நீங்களாகவும் இந்த மாற்றத்தைச் செய்யலாம். இப்போது, இணையம் வாயிலாக கட்டணம் ஏதுமில்லாமல், ஆதார் விபரங்களில் திருத்தம் செய்துகொள்ள, மத்திய அரசு செப்டம்பர் 14 வரை தேதியை நீட்டித்துள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டுக் கடனில் 'ஸ்டெப் அப் லோன்' என்று சொல்கின்றனரே? அதை வாங்கலாமா?


வி.ஜெ. ஜார்ஜ், மதுரை.

'ஸ்டெப் அப் லோன், டாப் அப் லோன்' என, இரண்டு வசதிகளை பல்வேறு வங்கிகளும், வீட்டுக் கடன் நிறுவனங்களும் வழங்குகின்றன. உங்கள் வயது என்னவென்று தெரிவிக்கவில்லை. நீங்கள் இளவயதினராக இருந்தால், ஸ்டெப் அப் லோன் உபயோகமானது. அதாவது, நீங்கள் உங்கள் துறையில் மேலும் வளரும் வாய்ப்புண்டு, அதற்கேற்ப வருவாயும் உத்தரவாதமாக உயரும் என்றால், ஸ்டெப் அப் லோன் பயன்படும்.

வீட்டுக் கடன் வாங்கும்போது, முதலில் மாதாந்திர தவணைத் தொகை குறைவாக இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அது படிப்படியாக உயரும். அதாவது வீடு வாங்கும் ஆசையுள்ள இளைஞர்கள், மாதத் தவணை தொகையைப் பார்த்து பயந்து, பின்வாங்கிவிடக் கூடாது என்பதற்காக, இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

யாரெல்லாம் 'நில் ரிட்டர்ன்' தாக்கல் செய்ய வேண்டும்?


ஜே. கோகுல்ராஜ், கள்ளக்குறிச்சி.

பழைய வரித் திட்டத்தின் படி, 60 வயது வரை உள்ளவர்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. 60 முதல் 80 வயதுக்காரர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது.

இத்தகையவர்கள், வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டாம். ஆனால், வருங்காலத்தில் ஏதேனும் கடன் வாங்குவேன், முகவரி சான்றிதழ் வேண்டும், வெளிநாடு செல்ல விசா எடுப்பேன், ஏதேனும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பேன் என்றெல்லாம் கருதுபவர்கள், 'நில்' ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம். பல இடங்களில் வருமான வரிப் படிவத்தை ஓர் ஆவணமாக கேட்கின்றனர். கட்டுவதற்கு வரி ஏதும் இல்லையென்றாலும், 'நில் ரிட்டர்ன்' செலுத்திய படிவத்தை ஆவணமாக கொடுக்க பயன்படுத்தலாம்.

எனக்கு தனியார் துறை வங்கியில் சம்பள கணக்கு உள்ளது. நான் இணைய வங்கி வசதி வாயிலாக, மாதந்தோறும் 2,000 ரூபாய் 5 ஆண்டுகளுக்கு ஆர்.டி. போட்டுவந்தால், ஏதாவது வருமான வரிச் சிக்கல் வருமா? எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை.


எஸ். புருஷோத்தமன், சென்னை.

ஆர்.டி.,யில் வரும் வட்டியை நீங்கள் உங்கள் ஆண்டு வருவாயில் காண்பிக்க வேண்டும். இந்த வட்டியானது, 10,000 ரூபாய்க்குள் இருக்குமானால், டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்பட மாட்டாது. நீங்கள் மாதம் 2,000 ரூபாய் போட்டுவந்தால், முதல் ஆண்டில் 24,000 ரூபாய் போட்டிருப்பீர். ஏழு சதவீதம் வட்டி என்றால், 926 ரூபாய் வட்டி கிடைக்கும். மூன்று ஆண்டுகள் முடியும் வரை, 10,000 ரூபாய்க்குள் தான் வட்டி கிடைக்கும். அதன் பின் தான் 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி போகும்.

டி.டி.எஸ்., பிடித்தம் இருந்தாலும் கவலை வேண்டாம். ஒருவேளை நீங்கள் மொத்த வருமான வரி விலக்கு வரையறைக்குள் இருந்தீர் என்றால், வருமான வரி படிவம் தாக்கல் செய்தால், பிடிக்கப்பட்ட தொகை 'ரீபண்டு' ஆகிவிடும்.

மியூச்சுவல் பண்டு திட்டங்களில், ஒரு பண்டில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஓராண்டில் 1 லட்சத்திற்கு மேல் லாபம் வந்தால், அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதம் கட்ட வேண்டும். அதேபோல் ஆறு பண்டுகளில் மொத்தமாக 5 லட்சம் முதலீடு செய்து, ஓராண்டில், 1 லட்சத்திற்கு மேல் லாபம் வந்தால் அதற்கு எவ்வாறு வரி வரையறை செய்யப்படுகிறது?


க.வெங்கட்ராமன், ராமேஸ்வரம்.

மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை விற்பனை செய்யும் போது தான், நீண்டகால அல்லது குறுகிய கால ஆதாய வரி என்ற அம்சமே வரும். நீங்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் மியூச்சுவல் பண்டு திட்டத்திலேயே முதலீட்டை வைத்திருக்கலாம். விற்பனை செய்யப் போகும் போது, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் இருக்குமானால், அப்போது நீண்டகால ஆதாய வரி 10 சதவீதம் செலுத்த வேண்டும்.

இந்த 1 லட்சம் என்பது, ஓராண்டில் கிடைக்கும் ஒட்டுமொத்த வரி விலக்கு தொகை. அதாவது, ஆறு பண்டுகளையும் விற்பனை செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவை மொத்தமாக 1 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியிருந்தால், அப்போது நீண்டகால ஆதாய வரி கட்ட வேண்டும்.

இந்த 1 லட்சம் ரூபாய் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள, பண்டுகளை ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக விற்பனை செய்யும் உத்தியைப் பலர் பின்பற்றுவர். அதன் வாயிலாக, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் போகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us