/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டி.வி., வாஷிங் மெஷின் விற்பனை பண்டிகை காலத்தில் 10 சதவீதம் அதிகரிப்பு
/
டி.வி., வாஷிங் மெஷின் விற்பனை பண்டிகை காலத்தில் 10 சதவீதம் அதிகரிப்பு
டி.வி., வாஷிங் மெஷின் விற்பனை பண்டிகை காலத்தில் 10 சதவீதம் அதிகரிப்பு
டி.வி., வாஷிங் மெஷின் விற்பனை பண்டிகை காலத்தில் 10 சதவீதம் அதிகரிப்பு
ADDED : நவ 04, 2024 01:28 AM

புதுடில்லி:டி.வி., வாஷிங் மெஷின், ஏ.சி., உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களின் விற்பனை, தீபாவளியை முன்னிட்டு 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அத்துறையைச் சேர்ந்த வணிகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி குறைந்துள்ளது.
கடந்தாண்டு பண்டிகை கால விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகரித்திருந்தது.
நடப்பாண்டு பண்டிகை கால விற்பனை மிகச் சிறப்பானதாக இல்லை என்றாலும், ஓரளவு திருப்திகரமாக இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரீமியம் பொருட்கள் மீதான மக்களின் ஆர்வம், பழைய பொருட்களை புதுப்பிப்பது, கவர்ச்சிகரமான இ.எம்.ஐ., வசதிகள் ஆகியவை விற்பனை அதிகரிக்க காரணமாக அமைந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை நுகர்வோர் பொருட்களின் மொத்த விற்பனையில் 30 சதவீதம், பண்டிகை காலத்திலேயே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு, குறிப்பாக கிராமப்புற மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள், எல்.இ.டி., டி.வி.,கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்தன.
நடப்பாண்டில் இதுவரை இப்பிரிவு நுகர்வோர் பொருட்களின் விற்பனை 9 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருட்கள் வாரியாக பார்க்கும்போது, வாஷிங் மெஷின்களின் விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும்; ரெப்ரிஜிரேட்டர்களின் வளர்ச்சி 12 சதவீதமாகவும்; டி.வி.,களின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ள போதிலும், பல உலகளாவிய ஆடம்பர பிராண்டுகளின் விற்பனை வளர்ச்சியடையவில்லை.
பணக்கார வாடிக்கை யாளர்களே இந்த பிராண்டுகளை அதிகளவு வாங்குவதால், அவர்களின் கலாசார எண்ணங்களை பிரதிபலிக்காத பிராண்டுகளின் விற்பனை குறைந்துள்ளது.