/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'அமேசான்' பிரீமியம் பொருட்கள் தமிழகத்தில் 35% அதிக விற்பனை
/
'அமேசான்' பிரீமியம் பொருட்கள் தமிழகத்தில் 35% அதிக விற்பனை
'அமேசான்' பிரீமியம் பொருட்கள் தமிழகத்தில் 35% அதிக விற்பனை
'அமேசான்' பிரீமியம் பொருட்கள் தமிழகத்தில் 35% அதிக விற்பனை
ADDED : செப் 20, 2024 01:14 AM

சென்னை:தமிழகத்தில் பிரீமியம் பொருட்கள் விற்பனை, 35 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக 'அமேசான்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமேசான் நிறுவனத்தின் 'கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ்' பிரிவு இயக்குனர் ரஞ்சித்பாபு சென்னையில் தெரிவித்ததாவது:
'அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்' விற்பனை வரும் 27ம் தேதி துவங்குகிறது. முந்தைய நாள், 'பிரீமியம்' உறுப்பினர்களுக்கான விற்பனை துவங்குகிறது.
தமிழகத்தில் அமேசான் இணையதளம் வாயிலாக, மக்கள் பொருட்களை வாங்குவது வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
மொபைல் போன், லேப்டாப், எல்.இ.டி., 'டிவி' மற்றும் வாஷிங் மிஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது, ஆண்டுக்கு 35 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 20,000 ரூபாய்க்கு மேல் உள்ள பிரீமியம் பொருட்களை வாங்கு கின்றனர்.
வாடிக்கையாளர்கள் வசதிக்காக, 'போன் செட் அப் சர்வீசஸ்' என்ற சேவையை, தமிழகத்தில் 21 நகரங்கள் உட்பட, நாடு முழுதும் 300 நகரங்களில் துவக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.