/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு வெளியீடுகளில் புதிய சாதனை
/
பங்கு வெளியீடுகளில் புதிய சாதனை
ADDED : நவ 11, 2024 12:47 AM

பொது பங்கு வெளியீடு களை பொறுத்தவரை, நிதி திரட்டுவதில் 2024ம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக நிறுவனங்கள் நிதி திரட்டும் நோக்கில் பங்குச்சந்தையில் நுழைந்து, ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்குகளை வெளியிடுகின்றன. இந்த ஆண்டு, கார் தயாரிப்பு நிறுவனம் ஹூண்டாய் உள்ளிட்டவை பங்குகளை வெளியிட்டுள்ளன. ஹூண்டாய் வெளியீடு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வெளியீடாக அமைந்தது.
வரும் வாரம், உணவு டெலிவரி சேவை நிறுவனம் ஸ்விக்கி மற்றும் ஆக்மே சோலார் ஹோல்டிங் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகளை வெளியிடுகின்றன. இதன் மூலம், இந்த ஆண்டு பங்கு வெளியீடுகளில் திரட்டப்படும் நிதி 1.20 லட்சம் கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் 2021 ம் ஆண்டு அதிகபட்சமாக, 1.19 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டது.
பங்கு வெளியீடுகளுக்கான ஆதரவு இந்திய மூலதன சந்தை முதிர்ச்சி அடைந்து வருவதன் அடையாளமாக கருதப்படுகிறது. எதிர்வரும் வெளியீடுகளையும் சேர்த்து, இந்த ஆண்டு மொத்தம் 71 பங்கு வெளியீடுகள் நிகழ்ந்து உள்ளன. கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு அதிக வெளியீடுகள் நிகழ்ந்துள்ளன.