/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கடன்சார் நிதிகளின் சிறந்த செயல்பாடு
/
கடன்சார் நிதிகளின் சிறந்த செயல்பாடு
ADDED : டிச 09, 2024 12:25 AM

விடைபெற இருக்கும் 2024-ம் ஆண்டில், கடன்சார் நிதிகள், லிக்விட் பண்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த செயல்பாடுகளை கொண்டிருப்பது தெரிய வந்து உள்ளது.
கடன்சார் நிதிகளில் ஒன்றான குறைந்த கால அளவு கொண்ட லிக்விட் பண்டு பிரிவு, 7.5 சதவீத அளவில் பலன் அளித்துள்ளது. நீண்ட கால அளவிலான நிதிகள் 10 சதவீத பலன் அளித்துள்ளன.
கடன்சார் நிதிகளின் சிறந்த செயல்பாட்டிற்கு உள்நாட்டு பொருளாதார அம்சங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார காரணிகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. சர்வதேச பத்திர குறியீட்டில் இந்தியா இடம்பெற்றது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும் சர்வதேச பொருளா தார காரணிகளும் கடன்சார் நிதிகள் செயல்பாட்டிற்கு ஆதரவாக அமைந்தன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் தற்போதைய நிலையைக் கடைப்பிடித்து வந்தாலும், சர்வதேச அளவில் வட்டி குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பு உள்நாட்டில் தாக்கம் செலுத்தியது.
வட்டி குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பு நீண்டகால அளவு நிதிகள் செயல்பாட்டிற்கு உதவிய நிலையில், அதிக கடன் தேவை லிக்விட் பண்டு பிரிவிற்கு ஆதரவாக அமைந்தது.