/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எஸ்.ஐ.பி., முதலீட்டில் தொடரும் பாதிப்பு
/
எஸ்.ஐ.பி., முதலீட்டில் தொடரும் பாதிப்பு
ADDED : மார் 16, 2025 07:29 PM

பங்கு சந்தை சரிவு காரணமாக, எஸ்.ஐ.பி., புதிய கணக்குகள் துவக்கப்படுவது குறைந்திருப்பதோடு, ஏற்கனவே உள்ள முதலீட்டை ரத்து செய்வதும் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய, எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீடு முறை ஏற்றதாக கருதப்படுகிறது. சில்லரை முதலீட்டாளர்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், பங்கு சந்தை சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்துகிறது.
அண்மையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்படும் முதலீடு குறைந்திருக்கிறது. எஸ்.ஐ.பி., முதலீடு ரத்து செய்யப்படும் விகிதம் பிப்ரவரி மாதத்தில் 122 சதவீதமாக இருந்ததாக மியூச்சுவல் பண்ட்கள் நிறுவன சங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
எஸ்.ஐ.பி., ரத்து விகிதம் அதற்கு முந்தைய மாதங்களில் ஜனவரியில் 109 சதவீதமாகவும், டிசம்பரில் 83 சதவீதமாகவும், நவம்பரில் 79 சதவீதமாகவும் இருந்தது. புதிய கணக்குகள் துவங்கப்படுவதும் மூன்று மாத சராசரியில் 16 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. ஸ்மால் கேப் நிதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சந்தை ஏற்ற இறக்கத்தை மீறி, எஸ்.ஐ.பி., முதலீட்டை தொடர்வதே சரியான உத்தி என வல்லுநர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.