/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செப்டம்பரில் சற்றே உயர்ந்தது
/
பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செப்டம்பரில் சற்றே உயர்ந்தது
பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செப்டம்பரில் சற்றே உயர்ந்தது
பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செப்டம்பரில் சற்றே உயர்ந்தது
ADDED : நவ 01, 2025 02:44 AM

புதுடில்லி: பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த செப்டம்பரில் 2.93 சதவீதம் உயர்வு கண்டு, 88,968 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக இ.இ.பி.சி., எனும் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் அது தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 88,000 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
இந்திய பொறியியல் பொருட்களுக்கான முக்கிய சந்தையான அமெரிக்காவுக்கு ஏற்றுமதி, வரி விதிப்பு தொடர்பான சவால்களால், கடந்த செப்டம்பரில் 9.4 சதவீதம் சரிந்துள்ளது.
அமெரிக்காவுக்கு கடந்தாண்டு செப்டம்பரில் 13,175 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அது 12,320 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே போல், மற்றொரு முக்கிய சந்தையான ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான ஏற்றுமதி 5,715 கோடி ரூபாயில் இருந்து, 5,604 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
சீனா மற்றும் ஆசியான், லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்ததால், ஒட்டுமொத்த ஏற்றுமதி சிறிது உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

