/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'10 சதவீத வளர்ச்சியை எட்ட ஏற்றுமதியில் கவனம் தேவை'
/
'10 சதவீத வளர்ச்சியை எட்ட ஏற்றுமதியில் கவனம் தேவை'
'10 சதவீத வளர்ச்சியை எட்ட ஏற்றுமதியில் கவனம் தேவை'
'10 சதவீத வளர்ச்சியை எட்ட ஏற்றுமதியில் கவனம் தேவை'
ADDED : பிப் 22, 2024 01:36 AM

புதுடில்லி:இந்தியா 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு, ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என, 16வது நிதிக் குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியா பத்து சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட, ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதிக்கு மாற்றான தொழில் கொள்கை என்ற துாண்டுதல் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.
திறந்த நிலையில் உள்ள நாடுகள் தான் வேகமாக வளர்ந்து வருகின்றன. தொழில்துறை கொள்கை மற்றும் இறக்குமதிக்கு மாற்றாக செயல்படுவதற்கான அறிவுசார் ஆதரவு, இந்தியாவில் வலுவாக உள்ளன.
இது நாட்டிற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.