/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.19,860 கோடி முதலீடு
/
அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.19,860 கோடி முதலீடு
ADDED : மே 31, 2025 10:53 PM

புதுடில்லி நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த மே மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் 19,860 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை வாங்கி உள்ளதாக என்.எஸ்.டி.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 26 முதல் 30ம் தேதி வரையிலான வாரத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 6,025 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி உள்ளனர்.
கடந்த வாரத்தின் அனைத்து வர்த்தக நாட்களிலும் தொடர்ச்சியாக பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள், வெள்ளியன்று மட்டும் 1,758 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று இருந்தனர்.
ஒட்டுமொத்தமாக ஜனவரி -- மே வரையிலான காலத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் 92,491 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று, முதலீடுகளை திரும்ப பெற்று உள்ளனர்.
நடப்பாண்டு துவக்கத்தை அன்னிய முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆரம்பித்த நிலையில், மே மாதத்தில் அதற்கு மாறாக இந்திய பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க துவங்கி உள்ளனர்.
மே மாதத்தில் அன்னிய முதலீடுகள் அதிகரித்திருப்பது, இந்திய பங்குச்சந்தைகள் மீது அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.
கடந்த ஜனவரியில் 78,027 கோடி ரூபாய்; பிப்ரவரியில் 34,574 கோடி ரூபாய்; மார்ச்சில் 3,973 கோடி ரூபாய் ; ஏப்ரலில், 4,223 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.