/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மியூச்சுவல் பண்டு துறை வளர்ச்சி விரிவாக்கம்
/
மியூச்சுவல் பண்டு துறை வளர்ச்சி விரிவாக்கம்
ADDED : ஜன 26, 2025 07:34 PM

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மியூச்சுவல் பண்டு துறையில் வளர்ச்சி தொடரும் என்றும், சிறிய நகரங்களில் அதிகரிக்கும் ஆர்வம் உள்ளிட்டவை இதற்கான முக்கிய காரணங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, இக்ரா அனலைடிக்ஸ் வெளியிட்டு உள்ள அறிக்கை, பெருநகரங் களை கடந்து சிறிய நகரங்களில் மியூச்சுவல் பண்டு ஆர்வம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறது. சிறிய நகரங்களில் உள்ளோர் சமபங்கு நிதிகளில் ஆர்வம் காட்டுவதாகவும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், மறுசுழற்சி எரிசக்தி, வங்கித்துறை, நுகர்வோர் துறை ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த நிதிகளும் முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்கின்றன.
மியூச்சுவல் பண்டு துறை வளர்ச்சியில் எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீடு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடு கடந்த டிசம்பர் மாதம், 40 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த போக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையான அம்சங்கள் மற்றும் அரசு கொள்கை ஆதரவும் மியூச்சுவல் பண்டு வளர்ச்சிக்கு உதவுவதாக கருதப்படுகிறது.

