/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜி.இ., நிறுவனத்துக்கு ஜெட் இன்ஜின் ஆர்டர் அளித்தது எச்.ஏ.எல்.,
/
ஜி.இ., நிறுவனத்துக்கு ஜெட் இன்ஜின் ஆர்டர் அளித்தது எச்.ஏ.எல்.,
ஜி.இ., நிறுவனத்துக்கு ஜெட் இன்ஜின் ஆர்டர் அளித்தது எச்.ஏ.எல்.,
ஜி.இ., நிறுவனத்துக்கு ஜெட் இன்ஜின் ஆர்டர் அளித்தது எச்.ஏ.எல்.,
ADDED : நவ 09, 2025 01:29 AM

மும்பை: தேஜஸ் போர் விமானங்களில் பொருத்துவதற்காக, எப் 404-ஜி. இ-.ஐ.என்.20 ரக 113 ஜெட் இன்ஜின்களை வாங்க, அமெரிக்காவின் ஜி.இ., எலக்ட்ரிக் நிறுவனத்துடன் எச்.ஏ.எல்., எனும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ஒப்பந்தம் செய்துள்ளது.
எச்.ஏ.எல்., நிறுவனம், 62,370 கோடி ரூபாய் மதிப்பிலான 97 தேஜஸ் 'எம்.கே.1 ஏ' விமானங்களை தயாரித்து சப்ளை செய்ய, கடந்த 2021ல் பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்கியது.
அதற்காக, ஜி.இ., நிறுவனத்துக்கு 8,870 கோடி ரூபாய் மதிப்பில், இன்ஜின் சப்ளை ஆர்டரை எச்.ஏ.எல்., தற்போது வழங்கி உள்ளது.
ஒப்பந்தப்படி 2027ல் துவங்கி 2032க்குள் விமான இன்ஜின்களை தயாரித்து ஜி.இ., நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும்.