ADDED : ஜன 22, 2025 11:37 PM

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
• உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, இந்திய சந்தையில் நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது உயர்வுடன் துவங்கியது. தொடர்ந்து, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், மந்தமான மூன்றாம் காலாண்டு முடிவுகள் காரணமாக, பிற்பகல் வரை சந்தையில் ஊசலாட்டம் நீடித்தது.
• அமெரிக்காவில் 43 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கட்டமைப்பு உருவாக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவிப்பின் எதிரொலியாக, வர்த்தகம் நிறைவடைய இருந்த கடைசி நேரத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மளமளவென விலை உயர்ந்தன. இதனால், சந்தை குறியீடுகள் உயர்வு கண்டன.
• நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், ஒன்பது துறை பங்குகள் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக ரியல் எஸ்டேட் நிறுவன குறியீடு 4.56 சதவீதம் இறக்கம் கண்டது. மாறாக, தகவல் தொழில்நுட்பத்துறை குறியீடு 2.14 சதவீதம் ஏற்றம் கண்டது
• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,799 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,149 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 11 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 4,026 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு --0.49 சதவீதம் உயர்ந்து, 79.68 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசா அதிகரித்து, 86.35 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
விப்ரோ
இன்போசிஸ்
டி.சி.எஸ்.,
டெக் மஹிந்திரா
எச்.டி.எப்.சி., பேங்க்
அதிக இறக்கம் கண்டவை
பெல்
டாடா மோட்டார்ஸ்
டிரென்ட்
பவர்கிரிட்
ஆக்ஸிஸ் பேங்க்