தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ கைகொடுத்த உலோகம், வங்கி துறைகள்

கைகொடுத்த உலோகம், வங்கி துறைகள்

கைகொடுத்த உலோகம், வங்கி துறைகள்


ADDED : நவ 06, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் அளவுக்கு எழுச்சி கண்டது. இதனால், பங்குச் சந்தை, ஆறு வாரங்களில் காணாத உயர்வுடன் நிறைவடைந்தது.

• நேற்று, வர்த்தகம் ஆரம்பித்த போதே இறக்கத்துடன் துவங்கியது. அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் தொடர்ந்ததால், பிற்பகல் வரை ஊசலாட்டம் நீடித்தது. பிற்பகல் வர்த்தகத்தின் போது, உலகளாவிய சந்தை போக்கை ஒட்டி, உலோகம், வங்கித்துறை சார்ந்த பங்குகள் கைகொடுக்கவே, சந்தை குறியீடுகள் நல்ல எழுச்சி கண்டன.

• நிப்டி குறியீட்டில், நுகர்வோர், மீடியா தவிர, அனைத்து துறை சார்ந்த பங்குகளும் உயர்வு கண்டன. குறிப்பாக உலோகம், பைனான்ஸ், வங்கி, பொதுத்துறை வங்கிகள், வாகனத்துறை சார்ந்த பங்குகள் தலா ஒரு சதவீதம் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில் 2,472 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 1,478 நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும்; 108 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,569 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று ஒரு பேரலுக்கு 0.60 சதவீதம் அதிகரித்து, 75.53 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு பைசா அதிகரித்து, 84.09 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்

 டாடா ஸ்டீல்

 ஹிண்டல்கோ

 பஜாஜ் ஆட்டோ

 ஆக்சிஸ் வங்கி

அதிக இறக்கம் கண்டவை

 டிரென்ட்

 அதானி போர்ட்ஸ்

 ஏசியன் பெயின்ட்

 ஐ.டி.சி.,

 இன்போசிஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us