தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ படுக்கையில் விழுந்த பங்குகள்; மருத்துவமனை பங்குகள் 7% வரை சரிவு

 படுக்கையில் விழுந்த பங்குகள்; மருத்துவமனை பங்குகள் 7% வரை சரிவு

 படுக்கையில் விழுந்த பங்குகள்; மருத்துவமனை பங்குகள் 7% வரை சரிவு


UPDATED : அக் 01, 2026 07:06 AM

ADDED : அக் 01, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 07:06 AM ADDED : அக் 01, 2026 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவமனைகள் மருந்துகளுக்கு அதிக விலை வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக, இத்துறை சார்ந்த பங்குகள் நேற்று 7 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

சிறு விற்பனையாளர்களுக்கு 2,700 ரூபாய்க்கு வழங்கப்படும் புற்றுநோய் மருந்து, 27,000 ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், அனைத்து மருந்துகளுக்கும் 16 சதவீத லாப வரம்பு நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

இதையடுத்து, 'அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், யதார்த் ஹாஸ்பிட்டல்ஸ்' உள்ளிட்ட நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சிகண்டன. 'நிப்டி ஹெல்த்கேர் ' குறியீடு 2.57 சதவீதமும், 'பி.எஸ்.இ., ஹெல்த்கேர்' குறியீடு 2.35 சதவீதமும் சரிந்தன.

Image 1624846

இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், மருந்தகம் மற்றும் மருந்து விற்பனை வாயிலாக அதிக வருவாய் பெறும் மருத்துவமனை நிறுவனங்களின் லாப வரம்பில் பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us