ADDED : நவ 14, 2024 03:57 AM

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்றும், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா ஒரு சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. தொடர்ச்சியாக, ஐந்தாவது நாளாக நிப்டி இறக்கத்துடன் நிறைவடைந்தது.
• நாட்டின் சில்லரை பணவீக்கம் உயர்வு, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் தொடர்வது ஆகியவற்றின் காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கியது. பிற்பகல் வர்த்தகத்தின் போது, ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால், சந்தை மேலும் வீழ்ச்சியடைந்தது.
• நிப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள், இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்தன.
• நிப்டி குறியீட்டில், அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கம் கண்டன. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட், உலோகம் சார்ந்த பங்குகள், கிட்டத்தட்ட 2.5 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியை கண்டன.
• மும்பை பங்குச் சந்தையில் 673 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும்; 3,297 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடனும்; 97 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,503 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 0.93 சதவீதம் அதிகரித்து, ஒரு பேரலுக்கு 72.56 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று எவ்வித மாற்றம் இன்றி, 84.39 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
பிரிட்டானியா
கிராசிம்
டாடா மோட்டார்ஸ்
ஏசியன் பெயின்ட்
என்.டி.பி.சி.,
அதிக இறக்கம் கண்டவை
ஹீரோ மோட்டோகார்ப்
மஹிந்திரா & மஹிந்திரா
ஹிண்டால்கோ
டாடா ஸ்டீல்
ஐச்சர் மோட்டார்ஸ்