/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அன்னிய செலாவணி கையிருப்பு: நான்காவது இடத்தில் இந்தியா
/
அன்னிய செலாவணி கையிருப்பு: நான்காவது இடத்தில் இந்தியா
அன்னிய செலாவணி கையிருப்பு: நான்காவது இடத்தில் இந்தியா
அன்னிய செலாவணி கையிருப்பு: நான்காவது இடத்தில் இந்தியா
ADDED : அக் 05, 2024 01:12 AM

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத உச்சமாக, 59.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு, கிட்டத்தட்ட 1.06 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்தது.
இதன் வாயிலாக, அமெரிக்க டாலர் மதிப்பில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 705 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
கடந்த 27 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ ஆகிய கரன்சிகள் மதிப்பில் ஏற்பட்ட சரிவுகளும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்க காரணமானதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் தங்கம் கையிருப்பு, 18,300 கோடி ரூபாய் அதிகரித்து, 5.53 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அன்னியச் செலாவணி கையிருப்பு 700 கோடி அமெரிக்க டாலர்களைத் தாண்டியதில், சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்தைத் தொடர்ந்து நான்காவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 626 கோடி டாலருடன் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது.