/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இந்தியன் வங்கி சி.இ.ஓ.,வாக பினோத் குமார் தேர்வு
/
இந்தியன் வங்கி சி.இ.ஓ.,வாக பினோத் குமார் தேர்வு
ADDED : நவ 25, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியன் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக பினோத் குமாரை நியமிக்க எப்.எஸ்.ஐ.பி., அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியன் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிக்கு பினோத் குமாரை எப்.எஸ்.ஐ.பி., எனப்படும் நிதி சேவை நிறுவனங்கள் பணியகம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது, குமார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த பரிந்துரை மீதான இறுதி முடிவு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவால் எடுக்கப்படும்.