/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.1,700 கோடி ஐ.பி.ஓ., வரும் லலிதா ஜூவல்லரி
/
ரூ.1,700 கோடி ஐ.பி.ஓ., வரும் லலிதா ஜூவல்லரி
ADDED : ஜூன் 07, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லலிதா ஜூவல்லரி மார்ட், ஐ.பி.ஓ., வாயிலாக 1,700 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட லலிதா ஜூவல்லரி மார்ட், தென்னிந்தியாவின் 46 நகரங்களில், 56 நகைக்கடைகள் வாயிலாக தங்கம், வெள்ளி மற்றும் வைர நகை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், முற்றிலும் புதிய பங்கு விற்பனை வாயிலாக 1,200 கோடி ரூபாயும், நிறுவனரான கிரண் குமார் ஜெயின் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 500 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.