/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மொபைல்போன் ஏற்றுமதி 54 சதவிகித உயர்வு
/
மொபைல்போன் ஏற்றுமதி 54 சதவிகித உயர்வு
ADDED : ஏப் 09, 2025 12:21 AM

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மொபைல் போன் ஏற்றுமதி மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இதில், ஐபோன் மட்டும் 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக, மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில், 2024-25ம் நிதியாண்டில், ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 54 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட்போன் மாறி உள்ளது.
கடந்த பத்தாண்டு களில், நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி 5 மடங்கும், ஏற்றுமதி 6 மடங்குக்கு மேலும் வளர்ச்சி கண்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.