தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ நிப்டியில் 24,200க்கு அருகே கன்சாலிடேஷன் நடக்கிறது

 நிப்டியில் 24,200க்கு அருகே கன்சாலிடேஷன் நடக்கிறது

 நிப்டியில் 24,200க்கு அருகே கன்சாலிடேஷன் நடக்கிறது


UPDATED : ஜூலை 14, 2026 12:30 AM

ADDED : ஜூலை 14, 2026 12:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 12:30 AM ADDED : ஜூலை 14, 2026 12:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 167 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி, சிறிது சிறிதாக மேல் நோக்கி நகர்ந்து நாளின் இறுதியில் 4 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 11 ஏற்றத்துடனும்; 4 இறக்கத்துடனும், 3 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்250' குறியீடு அதிக பட்சமாக 0.29 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 0.06 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடு இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1598570

இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.59 சதவீதம் அதிகரித்தும், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 1.02 சதவீதம் இறங்கியும் முடிந்தன. வர்த்தகம் நடந்த 3,442 நிறுவனங்களின் பங்குகளில் 1,772 ஏற்றத்துடனும்; 1,555 இறக்கத்துடனும்; 115 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன.

நிப்டி 14, 21, 50 மற்றும் 100 நாள் சராசரிகளுக்கும் (இ.எம்.ஏ.,), இச்சிமோகு க்ளவுட்டுக்கும் மேலே நிறைவடைந்துள்ளது. 24,200க்கு அருகே நிப்டி தொடர்ந்து கன்சாலிடேஷன் நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

மொமென்டம் இண்டிக்கேட்டர்களான எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., ஆகியவை ஏற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நிலையில் உள்ளன. உடனடி ரெசிஸ்டென்ஸாக 24,260ம், சப்போர்ட்டாக 24,000மும் இருக்கின்றன. 24,000த்திற்கு கீழே சென்றால் 23,945 மற்றும் 23,800 வரையிலும் செல்ல வாய்ப்புள்ளது.

Image 1598571

நிப்டி 24,260க்கு மேலே சென்றால் 24,400 மற்றும் 24,450ஐ நோக்கி நகரக்கூடும். எச்சரிக்கையுடன் கூடிய புல்லிஷ் டிரெண்டை எதிர்பார்க்கலாம். உலகளாவிய மற்றும் உள்நாட்டு செய்திகள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் சந்தையின் அடுத்த நகர்வை தீர்மானிக்கக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us