/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அரிசி இறக்குமதிக்கான வரியை அமெரிக்கா எவ்வளவு உயர்த்தினாலும் பாதிப்பு இருக்காது நெல், அரிசி வணிகர் சம்மேளனம்

ADDED : டிச 11, 2025 01:18 AM

கரூர் : ''இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு, அமெரிக்கா எத்தனை மடங்கு இறக்குமதி வரியை உயர்த்தினாலும், ஏற்றுமதியாளர், விவசாயிகளுக்கு பாதிப்பு இருக்காது,'' என, அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன மாநில செயலர் மோகன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து, 172 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய உள்பட பல்வேறு நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பாசுமதி அரிசி மட்டுமே, 60 சதவீதம் பஞ்சாப், ஹரியானாவில் இருந்து செல்கிறது. 2023- -24ல், இயற்கை பாதிப்பு காரணமாக உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய பாசுமதி தவிர்த்து, மற்ற அரிசி ரகங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. பின், 2024 செப்டம்பரில், அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கி கொண்டது.
கடந்த 2024--25ல் மட்டும் 198.65 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதில் 60.65 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் அரிசி ஏற்றுமதி, 235 லட்சம் மெட்ரிக் டன் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மொத்த அரிசி ஏற்றுமதியில், 5 சதவீதம் மட்டுமே அமெரிக்காவிற்கு செல்கிறது. அதில், பாசுமதி அரிசியே பெருமளவு ஏற்றுமதியாகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இறக்குமதி வரியை எத்தனை மடங்கு உயர்த்தினாலும், இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவின் மொத்த அரிசி ஏற்றுமதியில், 5 சதவீதம் மட்டுமே அமெரிக்காவுக்கு செல்கிறது. அதில், பாசுமதி அரிசியே பெருமளவு ஏற்றுமதியாகிறது.