
51 %
மு ம்பையைச் சேர்ந்த சவுராஷ்டிரா பிரைட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை, 662 கோடி ரூபாய்க்கு ஜப்பானை சேர்ந்த தளவாட நிறுவனமான கமிகுமி கையகப்படுத்தி உள்ளது.
பயர்பேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மொரீஷியஸ் துணை நிறுவனம் இந்த பங்குகளை விற்றது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில், சவுராஷ்டிரா பிரைட் நிறுவனத்துக்கு மிகப்பெரிய கன்டெய்னர் மையம் உள்ளது. நடப்பாண்டின் நான்காவது காலாண்டுக்குள் இது தொடர்பான பரிவர்த்தனை முடிவடைய உள்ளது.
26,400
பீ ஹாரில் 26,400 கோடி ரூபாய் முதலீட்டில், 2,400 மெகாவாட் புதிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இருப்பதாக அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 25 ஆண்டுகள் மின் வினியோகம் செய்வது தொடர்பாக அம்மாநில அரசு மின் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. 60 மாதங்களுக்குள் இதற்கான பணிகளை முடித்து, மின் உற்பத்தியை துவங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.