தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ரூ.4,000 கோடி ஐ.பி.ஓ., வரும் பிரெஸ்டீஜ் குழுமம்

ரூ.4,000 கோடி ஐ.பி.ஓ., வரும் பிரெஸ்டீஜ் குழுமம்

ரூ.4,000 கோடி ஐ.பி.ஓ., வரும் பிரெஸ்டீஜ் குழுமம்


ADDED : ஏப் 17, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:பெங்களூருவைச் சேர்ந்த பிரெஸ்டீஜ் குழுமம், ஹோட்டல் வணிகத்திற்காக 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட தயாராகி வருகிறது.

சந்தை ஏற்ற, தாழ்வுகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் துறைகளை பாதுகாப்பான முதலீட்டு தளங்களாக கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து, பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ., எனப்படும் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டுகின்றன.

இந்த வகையில், குடியிருப்பு, வணிகம், விருந்தோம்பல் எனப்படும் ஹோட்டல், சில்லரை விற்பனை பிரிவுகள் போன்றவற்றில் முன்னணியில் இருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான பிரெஸ்டீஜ் குழுமம், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்கு வெளியிட்டு வர உள்ளது. இதற்காக நிர்வாகக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய சொத்துக்களின் மேம்பாட்டிற்கும், கடனை அடைப்பதற்கும் திரட்டப்பட உள்ள நிதியை பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us