/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மலிவான சீன இறக்குமதியால் தனியார் துறை முதலீடு மந்தம்
/
மலிவான சீன இறக்குமதியால் தனியார் துறை முதலீடு மந்தம்
மலிவான சீன இறக்குமதியால் தனியார் துறை முதலீடு மந்தம்
மலிவான சீன இறக்குமதியால் தனியார் துறை முதலீடு மந்தம்
ADDED : நவ 26, 2025 01:34 AM

புதுடில்லி: மலிவு விலையில் சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவின் தேவை புலப்படாததால், தனியார் முதலீடு மந்த நிலையில் இருப்பதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான சஜித் சின்னோய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
சீனாவில் இருந்து மலிவு விலையில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாலும், தேவை குறைவதாலும் தனியார் தொழில் முதலீடுகள் குறைந்து உள்ளன. அமெரிக்காவுக்கு சீன பொருட்கள் ஆற்றில் வெள்ளம் பாய்வது போல் சென்ற நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் 32 சதவீத வரி விதிப்பு, அதனை தடுக்கும் சுவராக உள்ளது. இதனால், அந்த பொருட்கள், இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்றுமதியை அதிகரிக்க எதிர்பார்த்திருக்கும் வளரும் சந்தைகளுக்கு, சீன மலிவு விலை பொருட்கள் குவிவது சவாலாக மாறியுள்ளன. சீன பொருட்கள் இறக்குமதிக்கு பதிலாக, சீன அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதியளிக்கலாம். இது வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், உள்நாட்டு பொருளாதாரத்துக்கு உதவும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

