/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரோல்ஸ் ராய்ஸ் - திரிவேணி டர்பைன் தயாரிப்பில் ஒப்பந்தம்
/
ரோல்ஸ் ராய்ஸ் - திரிவேணி டர்பைன் தயாரிப்பில் ஒப்பந்தம்
ரோல்ஸ் ராய்ஸ் - திரிவேணி டர்பைன் தயாரிப்பில் ஒப்பந்தம்
ரோல்ஸ் ராய்ஸ் - திரிவேணி டர்பைன் தயாரிப்பில் ஒப்பந்தம்
ADDED : பிப் 07, 2025 12:39 AM

புதுடில்லி:இந்திய கப்பற்படை கப்பல்களுக்கான டர்பைன்களை தயாரிப்பதற்காக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், உள்நாட்டைச் சேர்ந்த திரிவேணி இன்ஜினியரிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கப்பல்களுக்கு தேவையான உந்துவிசையை வழங்கும் 4 மெகாவாட் சக்தி கொண்ட ஜி.டி.ஜி., எனப்படும் டர்பைன்கள், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக தயாரிக்கப்படும்.
இந்திய பாதுகாப்புத் துறையில் தன் இருப்பை விரிவுபடுத்தி வரும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தற்போது உலகளவில் பல்வேறு கப்பற்படைகளுக்கு 350க்கும் மேற்பட்ட டர்பைன்களை வழங்கியுள்ளது.
இதில், அமெரிக்க கப்பற்படையில் மட்டும் 280க்கும் மேற்பட்டவை புழக்கத்தில் உள்ளன.
இந்த ஒப்பந்தம், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன், நாட்டின் கடற்படை பாதுகாப்பையும் வலுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.