
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அதிக லாபம் ஈட்டுவதாக உறுதியளிக்கும், எந்தவொரு பட்டிய லிடப்படாத நிறுவனங்களிலும் முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு 'செபி' அறிவுறுத்தியுள்ளது.
செபியிடம் பதிவு செய்யப்பட்டதாக கூறும் போலி நிறுவனங்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனங்கள், செபி வழங்கியதாக கூறி, சில போலி சான்றிதழ்களை பயன்படுத்தி, உறுதியான அல்லது அதிக லாபம் ஈட்டுவதாக கூறி மக்களை கவர்ந்து இழுக்கின்றன.
அதிக லாபம் அல்லது உறுதியான லாபம் ஈட்டுவதாக உறுதியளிக்கும் எந்தவொரு நிறுவனத்திடமும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

