/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
முன்னுரிமை பெறும் எஸ்.ஐ.பி., முதலீடு
/
முன்னுரிமை பெறும் எஸ்.ஐ.பி., முதலீடு
ADDED : டிச 23, 2024 12:07 AM

இந்தியர்கள் மத்தியில் வழக்கமான முன்னுரிமை பெறும் வைப்பு நிதி முதலீட்டை விட, மியூச்சுவல் பண்ட் மற்றும் எஸ்.ஐ.பி., முதலீடு முன்னிலை பெற்று வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இணைய நிதிச் சேவை நிறுவனமான பாங்க்பசார், இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் பற்றி அறிய, மெட்ரோ மற்றும் சிறிய நகரங்களில் உள்ள 1,500க்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 58 சதவீதம் பேர் வைப்பு நிதி முதலீட்டை நாடுவதாக கூறியுள்ள நிலையில், 62 சதவீதம் பேர் மியூச்சுவல் பண்ட் மற்றும் எஸ்.ஐ.பி., முதலீட்டை முதன்மையாக நாடுவதாக தெரிவித்துள்ளனர். தங்கம் முதலீட்டை 30 சதவீதம் பேர் நாடுகின்றனர்.
காப்பீடு பாதுகாப்பை பொருத்தவரை, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டை பெற்றுள்ளவர்கள் 38 சதவீதமாக உள்ளனர். எந்தவித காப்பீடு வசதியும் இல்லாமல் 5 சதவீதம் பேர் உள்ளனர். மருத்துவ காப்பீடு மட்டும் பெற்றுள்ளவர்கள் 19 சதவீதமாக உள்ளனர்.
ஓய்வுகால திட்டமிடல் என வரும் போது, 58 சதவீதம் பேர் அதற்கான சேமிப்பை பெற்றிருப்பதாக கூறியுள்ளனர்; அதற்கான திட்டமிடலையும் உருவாக்கி கொண்டுள்ளனர்.