
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் லேசான இறங்குமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் வியாழன் அன்று ( வெள்ளி விடுமுறை), மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 111 புள்ளிகள் குறைந்து, 77,580 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 26 புள்ளிகள் குறைந்து, 23,533 புள்ளியாக இருந்தது. கடந்த ஏழு வாரங்களில் ஆறாவது முறையாக வாராந்திர நோக்கில் இறங்குமுகம் உண்டானது.
வெளிநாட்டு நிதி விலக்கல், அதிகரிக்கும் பணவீக்கம் தொடர்பான கவலை மற்றும் மந்தமான நிதிநிலை முடிவுகள் உள்ளிட்ட அம்சங்கள் சந்தையில் தாக்கம் செலுத்தின. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டிய நிலையில், உள்நாட்டு நிதிகழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.