/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை நிலவரம் :ஏற்றம், வெளியேற்றம், முடிவில் தள்ளாட்டம்
/
பங்கு சந்தை நிலவரம் :ஏற்றம், வெளியேற்றம், முடிவில் தள்ளாட்டம்
பங்கு சந்தை நிலவரம் :ஏற்றம், வெளியேற்றம், முடிவில் தள்ளாட்டம்
பங்கு சந்தை நிலவரம் :ஏற்றம், வெளியேற்றம், முடிவில் தள்ளாட்டம்
ADDED : ஆக 14, 2025 10:42 PM

ஏற்றம், வெளியேற்றம், முடிவில் தள்ளாட்டம்
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள் லேசான
ஏற்றத்துடன் முடிவடைந்தன. உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று
வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
அமெரிக்க வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில், உள்நாட்டு நுகர்வை
சார்ந்திருப்பதால், இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதாக எஸ்
அண்டு பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
எனினும்,
தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், டிரம்ப் -- புடின் இடையேயான
பேச்சு தொடர்பான முடிவுகளுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள்
முன்னெச்சரிக்கையுடன் சந்தையை அணுகினர். இதனால், நாள் முழுதும் சந்தையில்
ஊசலாட்டம் நீடித்தது. முடிவில், சிறிய உயர்வுடன் சந்தை குறியீடுகள் நிறைவு
செய்தன. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன்
நிறைவு செய்தன.
உலக சந்தைகள்
புதனன்று அமெரிக்க
சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, தென்
கொரியாவின் கோஸ்பி உயர்வுடனும்; ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய்
எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
* உலகளாவிய சந்தைகளில் சாதகமான சூழல் நிலவியது
* அமெரிக்கா -- ரஷ்யா பேச்சு தொடர்பான எதிர்பார்ப்பு
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் ___ கோடி ரூபாய்க்கு பங்குகளை ___ இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.53 சதவீதம் அதிகரித்து ,65.92 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து, 87.57 ரூபாயாக இருந்தது.
நிப்டி: 24,631.30
மாற்றம்: 11.95 ஏற்றம் பச்சை
சென்செக்ஸ்: 80,597.66
மாற்றம்: 57.75 ஏற்றம் பச்சை
உயர்வு கண்ட பங்குகள் நிப்டி (%)
விப்ரோ 2.01
எட்டர்னல் 1.71
இன்போசிஸ் 1.50
சரிவு கண்ட பங்குகள் நிப்டி (%)
டாடா ஸ்டீல் 2.81
அதானி போர்ட்ஸ் 1.38
ஹீரோ மோட்டோகார்ப் 1.27