sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : பிப் 15, 2024 11:04 PM

Google News

ADDED : பிப் 15, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 71,833.17நேற்றைய முடிவு: 72,050.38மாற்றம்: 227.55 (ஏற்றம்)



நிப்டி

முந்தைய முடிவு : 21,840.00நேற்றைய முடிவு: 21,910.80மாற்றம்: 70.80 (ஏற்றம்)



மகிழ்ச்சியில் ஆழ்த்திய சந்தை


 உலக அளவில் கொஞ்சம் உற்சாகம் பிறந்திருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், பணவாட்டம் தெரியத் துவங்கியுள்ளது. ஏனெனில் அங்கேயுள்ள நிறுவனங்களில் வருவாய் பெருகியுள்ளது. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் தாக்கம் நம் நாட்டின் பங்கு சந்தைகளிலும் தெரிந்தது
 காலையில் உற்சாகத்துடன் சந்தைகள் ஆரம்பித்தாலும், ஒருசில நெருடல்கள் இருக்கவே செய்தன. குறிப்பாக, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், பிப்ரவரி 14 அன்று, 3,929 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்தனர்
 இரண்டு, சக்திகாந்த தாஸ் விடுத்த எச்சரிக்கை. வங்கிகளின் நிதி நிர்வாகத்தில் கூடுதல் கவனம் தேவை, எந்தவிதமான அசிரத்தையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர் தெரிவித்தார் மதியத்துக்கு மேல் கொஞ்சம் நல்ல செய்திகள் வந்தன. குறிப்பாக, இந்தியாவின் சேவைத் துறை வர்த்தக உபரியானது, கடந்த ஆண்டு அக்டோபர் டிசம்பர் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த மூன்றாம் காலாண்டில், 16 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆர்.பி.ஐ. தெரிவித்தது
 மேலும், என்னதான் செங்கடல் பதற்றம் நிலவினாலும், இந்தியாவின் சரக்கு வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது என்று மற்றோரு தனியார் அறிக்கை சொன்னது
 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளின் பின்னணியில் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், வரும் பிப்ரவரி 21 அன்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்
 இந்தச் சூழலில், மாலையில் சந்தை முடிவடைந்த போது, நுகர்பொருட்கள் துறையைத் தவிர, இதர துறைகள் அனைத்தும் லாபம் ஈட்டியிருந்தன.



ஏற்றம் கண்ட பங்குகள்


 எம் அண்டு எம்.,  பி.பி.சி.எல்.,  ஓ.என்.ஜி.சி.,  என்.டி.பி.சி.,  பவர் கிரிட் கார்ப்பரேஷன்



இறக்கம் கண்ட பங்குகள்

 ஆக்சிஸ் வங்கி அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் ஐ.டி.சி.,  எச்.யு.எல்.,  நெஸ்லே இந்தியா








      Dinamalar
      Follow us