தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 03, 2024 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 02:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி


முந்தைய முடிவு : 22,338.75நேற்றைய முடிவு: 22,378.40மாற்றம்: 39.66 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்


முந்தைய முடிவு: 73,745.35நேற்றைய முடிவு: 73,806.15மாற்றம்: 60.80 ஏற்றம் பச்சை



நிறுவனங்கள் நிலை

(
மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 69%இறக்கம் கண்டவை : 27%மாற்றம் காணாதவை: 4%



தொடர் ஏற்றத்தில் சந்தை


* நேற்று, மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள், பேரிடர் காலம் உள்ளிட்ட அவசர காலங்களில் அவற்றின் பிரதான தளத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், அவற்றை சமாளிப்பதில் தங்களுடைய தயார்நிலை எப்படி உள்ளது என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளும் வகையில், சிறப்பு வர்த்தகத்தை நடத்தின.
* இந்த சிறப்பு வர்த்தகம், துவக்கத்தில் பிரதான தளத்திலும்; அதன்பின் மீட்பு தளத்திலுமாக, இரண்டு பகுதிகளாக நடைபெற்றது
* நேற்று முன்தினம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தரவு உத்வேகம் அளிப்பதாக இருந்ததால் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. இந்த ஏற்றம் நேற்றும் தொடர்ந்ததுடன் புதிய உச்சங்களும் எட்டப்பட்டன
* பங்குகள் விலை உயர்வைக் கண்டதன் தொடர்ச்சியாக, மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு 395 கோடி ரூபாயாக அதிகரித்தது
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, எதிர்பார்த்ததுக்கும் மேலாக 8.40 சதவீதமாக வளர்ச்சி கண்டது, இந்திய தயாரிப்பு துறை உற்பத்தி ஐந்து மாதங்களில் இல்லாத வளர்ச்சியை பெற்றது, ஆகியவை சந்தைக்கு கூடுதல் வலு சேர்த்தன
* மேலும், வெள்ளியன்று, அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டதும் சந்தைக்கு உவப்பானதாக அமைந்தது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று 129 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி உள்ளனர்.



ஏற்றம் கண்ட பங்குகள்


* டாடா ஸ்டீல்
* ஹீரோ மோட்டோகார்ப்
* அதானி போர்ட்ஸ்
* டாடா மோட்டார்ஸ்
* ஜெ.எஸ்.டபுள்யு., ஸ்டீல்



இறக்கம் கண்ட பங்குகள்


* மஹிந்திரா அண்டு மஹிந்திரா
* சன்பார்மா
* என்.டி.பி.சி.,
* மாருதி சுசூகி
* கிராஸிம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us