
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 573 புள்ளிகள் குறைந்து, 81,119 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 170 புள்ளிகள் குறைந்து, 24,719 புள்ளிகளாக இருந்தது.
சர்வதேச சந்தையின் பலவீனமான காரணிகள் மற்றும் ஈரான் தலைநகர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சந்தையில் தாக்கம் செலுத்தியது. இஸ்ரேல்- - ஈரான் இடையே முழு அளவிலான மோதல் வெடிக்கலாம் எனும் அச்சம், முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்தியது.