/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உலகளாவிய திறன் மைய முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு புதிய முயற்சி
/
உலகளாவிய திறன் மைய முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு புதிய முயற்சி
உலகளாவிய திறன் மைய முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு புதிய முயற்சி
உலகளாவிய திறன் மைய முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு புதிய முயற்சி
ADDED : ஆக 07, 2025 11:58 PM

சென்னை:
தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய திறன் மைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சென்னையில் உள்ள 'வழிகாட்டி' நிறுவனத்தில், ஒரு தனி அமர்வு விரைவில் அமைக்கப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், டி.எல்.எப்., ஆபீசஸ், 'கிரியேட் வொர்க்ஸ்' ஆகியவற்றின் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மைய மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு அமைச்சர் ராஜா பேசியதன் முக்கிய அம்சங்கள்:
சமச்சீரான தொழில் வளர்ச்சி:
பிற மாநிலங்களை பொறுத்தவரை, உதாரணமாக, மஹாராஷ்டிராவில் மும்பை, புனே, கர்நாடகாவில் பெங்களூரு என ஓரிரு நகரங்களில் மட்டுமே தொழில் வளர்ச்சி குவிந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி சமச்சீராக உள்ளது.
மாவட்டங்களில் தொழில் சிறப்புகள்:
காஞ்சிபுரம்: எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு தலைநகராக விளங்குகிறது.
கோவை: மோட்டார் பம்ப் உற்பத்திக்கு தலைநகராகவும், உலகளாவிய திறன் மையங்களின் மண்டலமாகவும் உருவெடுத்து வருகிறது.
திருநெல்வேலி: சூரியசக்தி மின் சாதன உற்பத்தி ஆலைகளைக் கொண்டு உள்ளது.
துாத்துக்குடி: மின் வாகன கார் தொழிற்சாலையைக் கொண்டு உள்ளது. மதுரை மற்றும் கன்னியாகுமரி: தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளுக்காக 'டைடல் பார்க்' கட்டப்பட்டு வருகிறது.
ஓசூர்: பல்வேறு தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள்:
ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் தமிழக அரசின் 'வழிகாட்டி' நிறுவனத்தின் அமர்வுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் விரைவில் ஒரு வழிகாட்டி அமர்வு அமைக்கப்பட உள்ளது.
இதேபோல, உலகளாவிய திறன் மையங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில், சென்னையில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில் தனி 'டெஸ்க்' அல்லது அமர்வு அமைக்கப்படும்.

