/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
துணி இறக்குமதிக்கு கட்டுப்பாடு: ஜவுளி துறையினர் வரவேற்பு
/
துணி இறக்குமதிக்கு கட்டுப்பாடு: ஜவுளி துறையினர் வரவேற்பு
துணி இறக்குமதிக்கு கட்டுப்பாடு: ஜவுளி துறையினர் வரவேற்பு
துணி இறக்குமதிக்கு கட்டுப்பாடு: ஜவுளி துறையினர் வரவேற்பு
ADDED : அக் 03, 2024 02:46 AM

திருப்பூர்:மலிவு விலை பின்னல் துணி இறக்குமதிக்கு, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்ததற்கு, ஜவுளி தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவின், ஜவுளி வர்த்தகத்தில், பருத்தி துணிகளின் பங்களிப்பே அதிகம். கொரோனாவுக்கு பின், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, செயற்கை நுாலிழை மற்றும் துணி உற்பத்தி, உள்நாட்டில் வேகமெடுத்தது.
செயற்கை நுாலிழை மற்றும் துணி உற்பத்தியில் முன்னோடியான சீனா, வரியில்லா வர்த்தக ஒப்பந்த சலுகையை பயன்படுத்தி, வங்கதேசம் வழியாக, குறைந்த விலை துணியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
உள்நாட்டு துணி உற்பத்தியாளர்கள் போட்டியிட முடியாத நிலையில், துணி இறக்குமதிக்கு கட்டுப்பாடு இல்லையேல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்ற எதிர்ப்பு கிளம்பியது. இதை பரிசீலித்த மத்திய அரசு, டிசம்பர் 31ம் தேதி வரை, துணி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மத்திய அரசின் முடிவால், எட்டு வகை செயற்கை நுாலிழை பின்னல் துணி ரகங்களுக்கு குறைந்தபட்சம் 20 சதவீதம் வரி விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இனிமேல், 3.50 டாலர் மதிப்புடைய துணி, அதாவது, கிலோ 294 ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பின்னல் துணி இறக்குமதிக்கு மட்டுமே, வரிவிலக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மலிவு விலை பின்னல் துணி இறக்குமதி செய்தாலும், வரியுடன் சேர்த்து விலை கடுமையாக உயரும்; இனி, இறக்குமதி கட்டுக்குள் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.