ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
வர்த்தக துளிகள்
UPDATED : பிப் 13, 2025 11:11 PM
ADDED : பிப் 13, 2025 11:04 PM
UPDATED : பிப் 13, 2025 11:11 PM ADDED : பிப் 13, 2025 11:04 PM
1.60 சதவீதம் அதிகரிப்புதேவை அதிகரிப்பின் காரணமாக, கடந்த ஜனவரியில் டீலர்களுக்கு அனுப்பப்படும் பயணியர் வாகனங்களின் எண்ணிக்கை 1.60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான சியாம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.பயணியர் வாகனங்களுக்கான தேவை வலுவாக இருந்ததன் காரணமாக, கடந்த ஜனவரியில் விற்பனை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.60 சதவீதம் அதிகரித்து, 3.99 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டு ஜனவரியில் 3.93 லட்சமாக இருந்தது. இருசக்கர வாகனங்கள் விற்பனை 2.10 சதவீதம் அதிகரித்து, 15.26 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2024 ஜனவரியில் 14.95 லட்சமாக இருந்தது. இதேபோன்று, மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் 7.70 சதவீதம் அதிகரித்து, 58,167 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 53,991 ஆக இருந்ததாக சியாம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி துறை விரிவாக்கம் மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபடுவதில் பொதுத்துறை நிறுவனமான இ.ஐ.எல்., எனப்படும் 'இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்' நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக, அதன் தலைவர் வர்திகா சுக்லா தெரிவித்துள்ளார்.வடிவமைப்பு, பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் இ.ஐ.எல்., தற்போது அணுசக்தி துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் இந்தியாவின் கூடங்குளம் மற்றும் கோரக்பூர் அணுமின் நிலையங்களில் பணியாற்றி வருகிறது. தற்போது, மத்திய கிழக்கு நாடுகளில் தன் செயல்பாடுகளை விரிவுபடுத்த உள்ளது. இதன் ஒருபகுதியாக, நடப்பு நிதியாண்டில் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஏ.டி.என்.ஓ.சி., எனப்படும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து, 190 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்லைல்' குழுமம் இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் வாயிலாக, இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான சந்தையில் தடம் பதிக்கிறது.அமெரிக்காவை தளமாகக் கொண்ட கார்லைல் குழுமம், இந்தியாவின் ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களான 'ஹைவே இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரூப் ஆட்டோமோட்டிவ்ஸ்' ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறது. இந்த பங்கு ஒப்பந்தத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட 3,500 கோடி ரூபாயாகும். இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, 65 முதல் 70 சதவீத பங்குகளை கார்லைல் கொண்டிருக்கும். மீதமுள்ள பங்குகளை இரு இந்திய நிறுவனங்களும் கொண்டிருக்கும்.