/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இந்திய பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி உறுதிப்படுத்தியது அமெரிக்க அரசு
/
இந்திய பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி உறுதிப்படுத்தியது அமெரிக்க அரசு
இந்திய பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி உறுதிப்படுத்தியது அமெரிக்க அரசு
இந்திய பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி உறுதிப்படுத்தியது அமெரிக்க அரசு
ADDED : ஆக 27, 2025 12:51 AM

புதுடில்லி:அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு இன்று முதல் 50 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என, அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 7ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூடுதல் வரி இன்று முதல் அமலாகிறது. இதன் காரணமாக, அதிக பணியாளர்களைக் கொண்ட ஜவுளி, காலணிகள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடல் உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதியும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என, தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, வரி விதிப்பின் தாக்கத்திலிருந்து தொழில்துறையினரை பாதுகாக்க, மத்திய அரசு வட்டி மானியம் உள்ளிட்ட உதவிகளை உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என, ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி
2024- - 25 நிதியாண்டு: ரூ . 7.35 லட்சம் கோடி
பாதிக்கப்படும் ஏற்றுமதி: ரூ . 5.10 லட்சம் கோடி
பாதிப்பு விகிதம்: 66%
நடப்பு நிதியாண்டு: ரூ . 4.22 லட்சம் கோடி (கணிப்பு)
- சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி நிறுவன அறிக்கை

