10 கிராம் தங்கம் ரூ.1.50 லட்சம் 'ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ்' கணிப்பு
10 கிராம் தங்கம் ரூ.1.50 லட்சம் 'ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ்' கணிப்பு
ADDED : அக் 18, 2025 12:17 AM

தங்கத்தின் விலை ஏற்கனவே தறிகெட்டு ஏறிக்கொண்டிருக்கும் சூழலில், அடுத்தாண்டு தீபாவளிக்குள், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை, 1.50 லட்சம் ரூபாயை தொடும் என, 'ஆக்ஸிஸ் செக்யூரிட்டிஸ்' வெளியிட்ட கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் காரணமாக வர்த்தகர்கள், நீண்ட கால முதலீட்டாளர்கள், 10 கிராம் தங்கத்தின் விலை 1.05 லட்சம் முதல் 1.15 லட்சம் ரூபாயாக குறையும்போது, தங்கத்தை வாங்குமாறு அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 1.33 லட்சம் ரூபாயாக உள்ளது.
தற்போதே தங்கத்தின் விலை உச்சத்தில் நீடிக்கும் நிலையில், அமெரிக்க பெடரல் வட்டி குறைப்பு, மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் டாலர் மதிப்பு சரிவு, தங்க இ.டி.எப்., திட்டங்களில் சீரான முதலீடு ஆகியவை காரணமாக, தங்கத்தில் முதலீடு மேலும் அதிகரித்து, தற்போதைய விலையில் இருந்து 30 சதவீதம் அளவுக்கு விலை உயர வாய்ப்புள்ளது என ஆக்ஸிஸ் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.