sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி., முதலீட்டிலிருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியுமா?

/

ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி., முதலீட்டிலிருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியுமா?

ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி., முதலீட்டிலிருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியுமா?

ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி., முதலீட்டிலிருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியுமா?


ADDED : ஆக 26, 2024 01:32 AM

Google News

ADDED : ஆக 26, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்க முதலீட்டு பத்திரத்தில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே முதலீட்டை திரும்பப் பெறும்போது, லாபத் தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டுமா அல்லது, அசல் மற்றும் லாபத் தொகைக்கு சேர்த்து வரி செலுத்த வேண்டுமா?


யு.முத்துசாமி, காஞ்சிபுரம்.

லாபத் தொகைக்கு மட்டும் தான் வரி. அசலுக்கு வரி கிடையாது. ஆனால், முன்னதாகவே தங்க முதலீட்டுப் பத்திரத்தை திருப்பிக் கொடுத்தாலும், அங்கே நீண்டகால மூலதன ஆதாய வரி வசூலிக்கப்படாது என்பது ஒரு தரப்பு ஆடிட்டர்களின் கருத்து.

'ரிடெம்ஷன்' என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர, 'பிரி மெச்சூர் ரிடெம்ஷன்' என்று எதுவும் தனியாகச் சொல்லப்படவில்லை. அதனால், முன்னதாகவே 'ரிடீம்' செய்வதும் 'ரிடெம்ஷன்' வரையறைக்குள் தான் அடக்கம் என்பது இவர்களுடைய வாதம்.

எட்டு ஆண்டுகள் முடிந்து, முதலீடு முதிர்வடையும் போது செய்யப்படும் 'ரிடெம்ஷ'னுக்குத் தான் இந்த மூலதன ஆதாய வரிச் சலுகை, முன்னதாகவே 'ரிடீம்' செய்பவர்களுக்குக் கிடையாது என்பது இன்னொரு தரப்பு. நல்ல ஆடிட்டரைக் கலந்தாலோசியுங்கள்.

'பான்' அட்டையில் எம்.ஜான்சி என்றே என் பெயர் அச்சாகியிருந்தாலும், பங்குச்சந்தை தரகர் அலுவலக ரசீதுகளும், கணக்கும் 'திருமதி. முத்தையன்' என்றே காட்டுகின்றன. கேட்டால், பான் பதிவின் உள்ளே முத்தையன் ஜான்சி என்று தான் பதிவாகியிருக்கும். அதையே உங்களின் முழுப் பெயராக எடுத்துக்கொண்டு, முதல் பாதிப் பெயரில் தான் ரசீதுகள் வரும் என்கின்றனர். என் தந்தைக்கு நான்கு பிள்ளைகள் எனும்போது, நால்வரின் தனிப்பட்ட கணக்குகளும் தந்தையின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு வந்தால், பெரும் குழப்பம்தானே ஏற்படும்? என் பெயரில் ரசீதுகள் வருமாறு, பான் அட்டையில் பெயரை திருத்தம் செய்ய என்ன வழி?


எம்.ஜான்சி, மதுரை.

இந்தக் குழப்பம் பல இடங்களில் இருக்கிறது. நம் நாட்டுப் பழக்கம் அப்பா பெயரை முன்னால் போடுவது. வெளிநாடுகளிலோ அப்பா பெயரைப் பின்னால் போடுவர். பான் அட்டையில் திருத்தம் செய்துகொள்ளலாம்.

உங்கள் பெயரை முதலிலும், உங்கள் அப்பா பெயரை பின்னாலும் போட்டு, திருத்தத்துக்கு மனு செய்யுங்கள். பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு, நீங்கள் விரும்பிய வடிவத்தில் உங்கள் பெயர் மாற்றித் தரப்படும். முன்னதாகவே ஒரு முறை எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம்.

மூன்று பெயர் கொண்ட முறைக்கு நகர்வது தான் சரி. பாஸ்போர்ட் மனு செய்யும்போது, நடுவிலும் ஒரு பெயர் கேட்கப்படும். குழந்தைக்குப் பெயர் வைக்கும்போதே, அப்படி பெயர் வைத்துவிட்டால், பிரச்னை இல்லை.

நான் எஸ்.ஐ.பி., முறையில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். என் அவசர தேவைக்கு அதில் பணம் எடுத்துக் கொள்ளலாமா?


கே.சேகர், திருவள்ளூர்.

எடுத்துக் கொள்ளலாம். அதற்கு வசதி இருக்கிறது. ஆனால், நீங்கள் எந்த வகையான மியூச்சுவல் பண்டு திட்டத்தில் பணம் போட்டு வருகிறீர்கள் என்பது முக்கியம். ஒருவேளை இ.எல்.எஸ்.எஸ். அல்லது 'பிக்சட் மெச்சூரிட்டி பண்டு' போன்றவற்றில் பணம் போட்டு வந்தீர்கள் என்றால், அதில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை எடுக்க முடியாது. அதற்கு 'லாக் இன்' பீரியட் என்று பெயர்.

பணத்தை எடுக்கும்போது, நீங்கள் எடுக்கும் காலத்தைப் பொறுத்து, அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரியோ, குறுகிய கால ஆதாய வரியோ செலுத்த வேண்டியிருக்கும். மேலும், நீங்கள் பணத்தை எடுக்கும்போது, அந்த தொகையின் அளவுக்கு மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள் விற்கப்பட்டே, பணம் தரப்படும். மீதம் இருக்கும் யூனிட்டுகளும், சேமிப்பும் குறைந்துவிடும் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.

நான் வேலையில் இருந்தபோது, ஒரு தனியார் நிறுவனத்தில், என் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் தனிநபர் விபத்து காப்பீடு எடுத்து, தெடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பணம் கட்டி வருகிறேன். தற் போது பணி ஓய்வுபெற்று, பென்ஷன் பெறுகிறேன். காப்பீடைத் தொடரலாமா? குடும்பத்தினருக்கும் பயனிருக்குமா?


கே.தனபால், செங்கல்பட்டு.

விபத்துக் காப்பீடை உங்களுக்கு மட்டும் எடுத்துள்ளீர்களா, அல்லது, உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து எடுத்துள்ளீர்களா என்பதை தாங்கள் தெரிவிக்கவில்லை. எப்படியாக இருந்தாலும், எந்த வயதில் இருந்தாலும், விபத்து காப்பீடு அவசியம் தேவை. நீங்கள் வண்டி ஓட்டினாலும், உங்கள் மீது வண்டி ஓடினாலும் விபத்து விபத்து தான். அந்த நேரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த காப்பீடு உதவும்.

இனிமேல் வீட்டோடு தான் இருப்பேன், வெளியே போகவே மாட்டேன் என்று சொல்ல முடியாது அல்லவா? அதுவும் பேருந்துகளிலும், வாகன பின்னிருக்கைகளிலும் அதிகபட்சம் மூத்த குடிமக்களைத் தான் பார்க்கிறேன். ஏதாவது ஒன்று என்றால், இந்தக் காப்பீடு உதவுமே.

அஞ்சலக காப்பீடு திட்டம் வழியாக செலுத்தி வந்த தொகை, பாலிசி முதிர்வுக்கு பின்னர் எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. காப்பீடு முதிர்வு தொகைக்கு வருமான வரி விலக்கு உள்ளதா?


பி.முருகானந்தன், ஒழலபதி கிராமம், பாலக்காடு, கேரளம்.

நீங்கள் எந்த ஆண்டில் பாலிசியை வாங்கினீர்கள் என்பதைப் பொறுத்தும், மொத்த உறுதியளிக்கப்பட்ட தொகையில், உங்களது பிரீமியம் தொகை எத்தனை சதவீதம் என்பதைப் பொறுத்தும், வரி விலக்கு விபரங்கள் சொல்லப்படுகின்றன.

ஒரேயடியாக, காப்பீடு முதிர்வுத் தொகைக்கு முழு வரி விலக்கு என்று சொல்ல முடியாது. ஒருசில விதிமுறைகளுக்கு உட்பட்டால், வரி விலக்கு உண்டு. உங்கள் பாலிசி விபரங்களை கையில் வைத்துக்கொண்டு, நல்ல ஆடிட்டரை கலந்தாலோசியுங்கள். வரி விலக்கு உண்டா, இல்லையா என்பதை அவர் தெரிவிப்பார்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com ph: 98410 53881






      Dinamalar
      Follow us